ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

ஐப்பசி -தேய்பிறை அஷ்டமி - பூசம் நட்சத்திரம்

ஆன்மீக அன்பர்கள் யாவருக்கும் வணக்கம் !!!

பொறுமையும் நம்பிக்கையையுமே நம்மை பக்குவப்படுத்தும் - சகஸ்ரவடுகர்

 

வருகின்ற (3/11/2015 - 4/11/15) செவ்வாய் கிழமை -தேய்பிறை அஷ்டமி - பூசம் நட்சத்திரம் வருகிறது, இது மிகுந்த சிறப்பு வாய்ந்தது ஆம். இந்நாளில் மாலையில் நாம் நமது அருகில் இருக்கும் பைரவர் ( எந்த அவதாரத்தில் இருந்தாலும் ) சன்னதி சென்று அபிஷேகப்பொருட்கள் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து சிறிது நேரம் தியானம் செய்து வேண்ட, நினைத்த காரியம் சித்தி ஆகும், என்பதில் ஐயம் வேண்டாம். நியாமான கோரிக்கைகள் கட்டாயம் பலிதமாகும். இந்நாளில் நமது பைரவர் துதி பாடுவது சாலச்சிறந்தது.

அபிஷேகப்பொருட்கள் :

  • செவ்வரளி மாலை
  • அத்தர்
  • ஜவ்வாது
  • சந்தநாதித்தைலம்
  • ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

அர்ச்சனை செய்வது அவசியம் !

நமது அய்யா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சியில் ஒன்று !! வெற்றி கண்டவர்கள் ஏராளம்.

ஓம் கால பைரவரே சரணம் !!!

- சகஸ்ரவடுகர்

302 Found

302 Found


nginx